இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்ட விழா புத்தளம் மாவட்ட கௌரவ மீன்பிடி மற்றும் நன்னீர் மீன்பிடி கைத்தொழில் இராஜாங்க  அமைச்சர் சனத் நிசாந்த பெரேரா அவர்களின் தலைமையில் புத்தளம் களப்புக் கடற்கரையில் 4 ஆந் திகதியான இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

72 ஆவது தேசிய சுதந்திர கொண்டாட்ட விழாவிற்கு இணைவாக “பாதுகாப்புமிக்க  தேசியம் – வளமிக்க நாடு” எனும் கருப்பொருளை வெளிக்கொணரும் வகையில் நடைபெற்ற புத்தளம் மாவட்ட தேசிய சுதந்திர கொண்டாட்ட விழாவில்  மாவட்ட மதகுருமார்கள், அரசியல் அதிகாரிகள் மற்றும் புத்தளம் மாவட்ட செயலாளர் எல்.ஜே.எம்.ஜீ.சீ.பண்டார ஆகியோர் முதலாக அரச உத்தியோகத்தர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் பங்குபற்றினர்.

இம்முறை சுதந்திர கொண்டாட்டத்தினை  அலங்கரிக்கும் வண்ணமாக தேசிய கொடி ஏற்றுதல்,தேசிய  கீதம்  இசைத்தல், மரியாதை அணிவகுப்பு,தேசிய நடனம் மற்றும் மேள வாத்தியம் எனும் அம்சங்களோடு நடைபெற்றதோடு அதில் பாடசாலை மாணவ மாணவிகளின் வாத்திய  இசைக்  குழுவினரும்  பங்குபற்றி இருந்தனர்.

 

  Ind 2020 27
 02 Ind 2020 44  04 Ind 2020 49
 03 Ind 2020 66  05 Ind 2020 11
 06 Ind 2020 6  16 Ind 2020 55
 14 Ind 2020 41  17 Ind 2020 12
 57 Ind 2020 35  56 Ind 2020 70
 59 Ind 2020 22  60 Ind 2020 33
 29 Ind 2020 19  51 Ind 2020 61
 68 Ind 2020 8  66 Ind 2020 15
 35 Ind 2020 43  63 Ind 2020 42